என் கண்மணியே இப்ப சொல்லு எங்க வாழலாம்

ஆடிமாசக் காத்தோடு
வாடாமல்லி வாசத்தோடு
வாடிபுள்ள நேசத்தோடு
தேடிபோலாம் நாம்வாழ தேசத்தோடு!

சீமையில செஞ்ச சீலையெல்லாம்
நூலில்லா செயற்கை இழையாம்
அது வேணாங் கண்ணே உனக்கு
நம்ம ஊரு பருத்திச் சீலை இருக்கு!

சீமையில செய்யிற பிசா ரொட்டியாம்
விக்கிற விலையோ சேட்டுக்கடை வட்டியாம்
நேத்து மீந்ததெல்லாம் மேலத்தூவி செய்வாங்களாம்
அது வேணா புள்ள உனக்கு
நம்ம ஊரு அடை அவியல் இருக்கு!

சீமையில எடுத்ததுக்கெல்லாம் ஊசியாம் மாத்திரையாம்
ஆஸ்பத்திரியில கூட ஏசியாம், முதல்ல காசாம்
ஏசிய தவர்த்திடுங்கன்னு மருத்துவர் சொல்வாராம்
அது வேணா செல்லமே உனக்கு
'உணவே மருந்து'ன்னு பழமொழியே இருக்கு!

சீமையில, தெருவிலேயும் கடையிருக்கும்
ஒரு தெருவளவும் ஒரே கடையுமிருக்கும்
பொருளுக்கு மட்டும் இல்லாம விளம்பரத்துக்கும்
சேர்த்து விலையாம் ஏன்னு கேட்க யாருமில்லையாம்
அது வேணா பொண்ணே உனக்கு
வாரவாரம் அதிசுத்தமான பொருள்கிடைக்கும் சந்தை இங்கயிருக்கு!

சீமையில சாலையில வண்டியில போறவங்க
முகத்தில துணியக் கட்டிப் போவாங்க
அத்தனையும் மாசும் தூசுமாங்க அங்க
அது வேணா மணியே உனக்கு
சுத்தமான காத்தும் நீரும் இங்க இருக்கு!

சீமையில கூடி வாழ்வாங்களாம்
கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்களாம்
குழந்தையும் குடும்பமும் கஷ்டமாயிருக்குமாம்
அது வேணா உயிரே உனக்கு
சேர்ந்தே சாகவும் தயாராயிருக்கேன் நான் இங்க உனக்கு!

சீமையில பெத்தவங்க வயசு முத்திப்போச்சுன்னா
அவங்க மரியாதையே போச்சு என்ன
தெருதோரும் இருக்கும் முதியார் இல்லத்தில
நாளுக்குநாளாக இடம்கிடைக்காம போகிறதில
அது வேணா ராசாத்தி உனக்கு
நெய்பந்தம் பிடிக்கிற வரைக்கும் சொந்தம் இருக்கு!

இயற்கையிலான கிராம வாழ்க்கை இருக்க
செயற்கையான நகர வாழ்க்கையும் இருக்க
நாம செத்த பிறகும் மின்சாரத்தில வெந்து மறையாம
இங்க இந்த மன்ணுக்கே உரமாகி மீண்டும் வாழலாம்!
என் கண்மணியே இப்ப சொல்லு எங்க வாழலாம்...?

எழுதியவர் : அலெக்சாண்டர் (29-Aug-15, 11:43 pm)
பார்வை : 71

மேலே