பெண்ணே நீயும்

தன்நிழலால் நிலவை மறைத்து
அமாவாசை கொண்டாடுகிறது
-உலகம்

(பெண்ணே நீயும் நிலவாம் )

கடவுள் அருகே இருந்தாலும்
விழுந்தேதான் கிடக்கின்றன
-பூசையில் மலர்கள்

(பெண்ணே நீயும் மலராம்)

நீ புத்தனுமில்லை
நான் போதிமரமுமில்லை
என்னில்நீ ஞானம்பெற..

எழுதியவர் : moorthi (30-Aug-15, 10:25 am)
Tanglish : penne neeyum
பார்வை : 196

மேலே