கல்மரம்

20,000,000 ஆண்டுகளுக்கு முன்னால்
காய் கனிகள் நிறைந்து நின்றாயோ
காக்கை குருவி சத்தம் கேட்டாயோ
விழுதில் சிறுவர் ஆட மகிழ்ந்தாயோ

களைப்பாற இளைப்பாற பல நேரம்
காதலர் சல்லாபங்கள் சில நேரம்
தொட்டிலில் மழலை தூங்கிடும்
தென்றலும் தாலாட்டு பாடிடும்

மூதாதையரின் தமிழ் கேட்டாயோ
முக்காலமும் அறிந்து நின்றாயோ
கால ஓட்டத்தில் நீயும் ஓடினாயோ
மரமாகி கல்லாகி சிலை ஆனாயோ

எழுதியவர் : கார்முகில் (30-Aug-15, 7:34 pm)
பார்வை : 90

மேலே