காதல் தவிர

பேச்சும் மூச்சும்
ஊனாகி உயிராகி
இயங்கும் இயக்கம்
ஏங்கும் ஏக்கம்
எல்லாம் எதற்கு?

வாழ்வெனும் சந்தனக்கிண்ணம்
வாசம் தரும் தன்னுடம்
சொட்டாய் விழுந்த காதல்
இட்டுக்கொள்ளவோர் பட்டுக்குங்குமமே,

தேடாதே, தேடிவரும், வராமலும் போகலாம்;
கேட்டதெல்லாம் கிடைக்க
வாங்கிவரவேண்டும் வரம்; இல்லையெனில்
விட்டு விடு, உன் இலக்கு ஏராளம்.
வாழ்க்கையை வாகை சூடுகையில்
வந்து சேரும் விரும்பும் எல்லாம்.

காதல் தவிர இருக்கும் இங்கே எத்துனை?
மகத்துவம் அறியா மடந்தையா நீ?
வாழ்வின் ஒரு நாள் விபத்தில்
காணாது போக காகித பட்டமா நீ?

அன்பை, பண்பை, நட்பை, நாகரீகம்
கற்று கொடுத்தலே காதல்
இல்லாது
உன்னை சிதைத்து
சின்னாபின்னமாக்கும் சுயநல நோயா
காதல்..?

தொட்டால் சுடும்,
பட்டு தெளிய பாடம் கற்க
பருவம் இழந்து உருவம் குலைய
சோதனையோட்டமேனும்
க்காதல் தேவையா ?
மகனே, மகளே, கேள்?
கொள்:
உன்னை கொல்லுவது எது?
சொல்.
நில்..
நிஜம் தேடு..
நிழல் விட்டு நீங்கு..
நீ எனக்கு உயிர்,

என் காதல் பாசம்
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறாய்
ஞானத்தங்கமே?


இப்படிக்கு,
அன்புடன்,

அம்மா, அப்பா,
அண்ணன், அக்கா,
தம்பி, தங்கை
மற்றும் பலர்.

எழுதியவர் : செல்வமணி (31-Aug-15, 9:59 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kaadhal thavira
பார்வை : 112

மேலே