கவியும் நானும்

குளிக்கும் போதோ
உணவருந்தும் போதோ
திடீரெனயெழும் வரிகளை
எழுதயியலாமல்
தவிக்கவிடுவேன்
சிலநேரம் கவியை...
தலைப்புக்கிட்டிய பின்னும்
தானாக வரிகளை
தராமல் என்னை
தவிக்கவிடும் கவி
எதிர்வினையாய்...!
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்