மோகன புன்னகை 3

மீண்டும் நாட்கள் நீங்க மீரா ஒரு மாலையில் மறுபடியும் கார்த்திகாவிடம் கேட்டாள் அவனை பற்றி...
"எதுக்கு அவனை பத்தி கேக்ற சொல்லு. "
"அவங்க என் தூரத்து சொந்தத்துல ஒரு சித்தப்பா மாதிரி இருகாங்க அதன் கேட்டேன் சொல்லுங்க."
"ம்ம். அவன பாத்தா சித்தப்பா மாதிரியா இருக்கான்? ஹ ஹ... அவன் அப்பா ஒரு காலேஜ் ல ஆபீஸ்ல வொர்க் பண்றார். அம்மா ஹவுஸ் ஓய்ப். ஒரு தங்கச்சி. 8த் படிக்ற. அவன் ரொம்ப அமைதி அண்ட் தனிமை விரும்பி. பொண்ணுங்க கூட ரொம்ப பழகமாட்டான். ரொம்ப நல்லவன். வேறென்ன வேணும்?"
"அவ்ளோ போதும்" என்ற மீரா புன்னகைத்து திரும்பிவிட்டாள். ஆனால் அன்று மாலை அவன் இறங்கிய பின் கார்த்திகா அவனிடம் ஏதோ சொல்வதும் அவன் மீராவை பார்த்ததும் போல் மீராவிற்கு தோன்றியது.
மறுநாள் மாலை கார்த்திகா மீராவிடம் சொன்னாள்.
" உன்னை பத்தி கிருஷ்ணா கிட்ட சொன்னேன்"
"என்னது? என்ன பத்தி என்ன சொன்னேங்க?"
"அவன் உன் சித்தப்பா மாதிரி இருக்காதா சொன்னேன். "
"சுத்தம்!அவங்க என்ன சொன்னங்க?"
"அது யாரு? நான் பாக்கணுமே சொன்னான். நீ எபோதும் இருக்குற சீட் சொல்லிருக்கேன். சாயங்காலம் வந்து பாக்றேன் சொல்லிருக்கான் "
"சுத்தம்! நான் வேற சீட் மாறிடுவேன்" என்று சொன்னவள் மாறவில்லை. அவன் இன்று மாலை என்னை பார்க்க போகிறான? அவனது புன்னகை இன்றைக்கு எனக்காக இருக்குமா? ஹன்ட்பாக் இல் இருந்த கண்ணாடியில் யாரும் அறியாமல் ஒருமுறை தன்னை பார்த்துகொண்டால். அவன் மாலை பஸ் ஏறி அவனது இருக்கைக்கு சென்று விட்டான். அவளை பார்த்த மாதிரி தெரியவில்லை. ஆனால் அவன் மாலை இறங்கும் இடம் வந்ததும் எழுந்து திரும்பி நின்றவன் அவளை தேடினான்... மீராவின் இதயம் அதன் உச்சசுதியில் அடித்தது. கண்டுபிடித்துவிட்டான். அவளது கண் கண்ணாடி அவளுக்கு அடையாளமாய் இருந்தது. எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஜன்னல் ஒர சீட்ம் கண்ணாடி போட்ட பெண்ணும்.... அவன் அவனுக்கே உரித்தான புன்னகையை உதிர்த்தான்.... இப்போது புன்னகை மீராவின் முகத்தில் பரவி இருந்தது. அவன் அவள் அருகே வர வர அவள் புன்னகையின் உச்சத்தில் இருந்தாள். அவள் சீட் அருகே வந்ததும் அவன் அவளிடம் பை என்றான்...
"பை "என்றவள் மனதில் நினைத்து கொண்டாள் என்ன இது?
ஆரம்பமே பை. தொடக்கமே முடிவு போல. என்று எண்ணியவள் ஜன்னல் வெளி தலை திருப்பி கொண்டாள். மீரா அவள் அறியாமல் அவனுக்கு பை என்று கை காட்டினாள்...
அதற்கு பதில் அவன் புன்னகை தான்.

அதே மோகன புன்னகை தான்.....

எழுதியவர் : ஸ்ரீதேவி (1-Sep-15, 10:26 am)
பார்வை : 219

மேலே