தாய் அன்பு

தாய் இவள் அன்புக்கு
ஆதியும் இல்லை
அந்தமும் இல்லை
அகிலத்தையே
மயங்க வைக்கும்
அவள் அன்பு எனும்இசை
பத்து மாதம் சுமந்து
பத்தியமாய் உணவு உண்டு
சுய விருப்பத்தை தியாகம் செய்து
வலி பொறுத்து வழி தருகிறாள்
இந்த உலகத்திற்கு வர
பசித்த போது பாலுட்டி
பயந்த போது உறுதிகொடுத்து
மெத்தையாய் மடி தாங்கி
பண்போடு ஆளாக்கி
புதிராகும் சூழ்நிலையில்
புரிய வைத்து
பழுதில்லா பழமையை
பயிர் செய்து
பார் போற்றும் குணங்களோடு
பார்ப்போர் வியக்கும் படி
உருவாக்கி
எத்தனை வளர்ந்தாலும்
பார்வையிலேயே என்னை படித்து விடும்
அவளுக்கு இணை
இது வரை இல்லை இந்த ஜகத்திலே

எழுதியவர் : கவின் மலர் (1-Sep-15, 10:46 am)
Tanglish : thaay anbu
பார்வை : 209

மேலே