திரானா பாப்பாவின் மழழைக் கவி - 2

அந்தக் கதை சொல்லி
இந்தக் கதை சொல்லி
நான்கு உருண்டை சோற்றை
போராடி ஊட்டி விட்டபின்...

கடைசி உருண்டை சாப்பிட
எப்போதும் போலவே
அடம்பிடித்தாள் எங்கள்
திரானா குட்டி....!!

மீதி இருந்த சோற்றை
இரு உருண்டைகளாக்கிய அவள்
என்னிடம் ஒன்றையும், அவள்
அப்பாவிடம் ஒன்றையும் தந்தாள்...!!

அப்பா நீ அம்மாக்கு ஊட்டிவிடு..
அம்மா நீ அப்பாக்கு ஊட்டிவிடு..
அப்போதான் நா ஒழுங்கா சாப்டுவேன்..
என்று செல்லமாய் கோபித்தாள்...!!

ஆசை மகளின் கட்டளை நிறைவேற்றிட
சட்டென்று என்னவர் என் வாய் திறந்திட
அங்கே பொங்கிய நாணம்
மெல்ல என்னைத் தின்றது....!!!

~ தப்தி செல்வராஜ், சாத்தூர்

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (1-Sep-15, 1:56 pm)
பார்வை : 137

மேலே