திரானா பாப்பாவின் மழழைக் கவி
குட்டிமா...சூரியன பாத்தா
உனக்கு என்ன தோணுது...?
அம்மா மாதிரி இருக்கு...
மஞ்சள் பூசி அழகா..
ஆனா கொஞ்சம் கோவமா
அப்பிடித் தோணுது...
செல்லம்...நிலாவ பாத்தா
உனக்கு என்ன தோணுது...?
அப்பா மாதிரி இருக்கு...
என்னைய மாதிரியே வெள்ளையா..
என் கூடவே ஓடி வெளையாடுமே
அதனால தோணுது...
பாப்பா...மழைய பாத்தா
உனக்கு என்ன தோணுது...?
அப்பா உன்னைய திட்டும்போது
உன் கண்ணுல இருந்து
சொட்டு சொட்டா வருமே மா
அது மாதிரி தோணுது...
எங்கள் வீட்டின் குட்டிக் கவிதை
மூன்றரை வயது திரானா சொல்லிடும்
இன்னும் பல மழழைக் கவி கேட்டிட
எல்லாரும் எங்க வீட்டுக்கு வாங்க ....!!!
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்