தாய் தந்தையானால்

தாய் தந்தையானாள்
ஆண்மகன்கள் அணைவருக்கும்
அவன் ரசிக்கும் கதாநாயகன்
அவன் தந்தை என்பது பொய்யானது
என் வாழ்க்கையில்..ஆண்டவன் என் அறியா
வயதில் அவரை அழைத்துக் கொண்டமையால்..

ஆனாலும் நன்றி அந்த இறைவனுக்கு.

என் அன்னையை
எதற்கும் ஒப்பீடற்றவளாய் எனக்காய்
படைத்ததற்கு...

வீரத்தில்அவள் ஒரு அலெக்ஸாண்டருக்கு
இணையானவள் எங்களுக்காய் அந்த
நஞ்சுடைய நாகத்தை நசுக்கிய போது..

யாசிபவர்களுக்கு யோசிக்கும்
முன்பே அவள் கொடுக்கும் பண்பு
கர்ணனை விட மேலானது என
கதை கேட்ட போது தெரிந்தது.
..
சிலசமயம் சேவல் காத்திருக்கும்..கூவுவதற்கு..
என் அன்னை எழுப்புவாள் என்று .
அதற்கும் தெரியும்.
எங்களுக்காக அவள் அடுப்பு வைக்கும் நேரம்
அதற்கும் முன்பென்று..

எறும்புகளின் சுறுசுறுப்பு எனக்கு
ஒருநாளும் ஆச்சர்யம் தந்ததில்லை.
அவை என் அன்னையால் அறிமுகபடுத்தப்பட்டதால்..

தேனீக்களின் சேமிப்பு.. அவைகள்
என் அன்னை உழைத்ததில் உருவான
செல்வங்களை விட செழிப்பாய் ஒருநாளும் தோன்றியதில்லை..

படிக்காத மேதை, கல்விக்கண் திறந்த காமராஜர் என்றால்..
அவரை அறிந்ததும் என் படிப்பற்ற அன்னையால்
எனக்கு திறந்த கல்விக்கன்னால் மட்டுமே..

எப்பொழுதும் வருந்தியதியல்லை.
என் தந்தை இல்லைஎன்று..
என் தாய் தந்தையுமானதால்..

கடவுளை கண்டால் கண்டிப்பாக
வரம் வேண்டி நிற்பேன்..
உனக்கு முன் நான் இறப்பதற்கு..

உன்னை இழக்கும் தைரியம்
எனக்கு என்றும் இல்லை என்பதால்..

எழுதியவர் : கணேச மூர்த்தி (30-Aug-15, 8:11 pm)
பார்வை : 265

மேலே