பூக்காரியின் புலம்பல்
// ஊடல் -2, வேலை முடித்து வீடு திரும்பும் கணவர் தாமதமாக வந்தபின் நடக்கும் அன்பார்ந்த ஊடல் //
மணி 7.30.. வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டின் மணி ஓசையை அழைக்க விக்ரம் கைஉயர்தியது தான் தாமதம்.. படக்கென கதவு திறக்க லேட்டஸ்ட் ருத்ரமாதேவி போல வரவேற்றாள் மௌனிகா...
****************** ******************
ஹே... மௌனி... கதவே தட்டல அதுக்குள்ளே எப்படிமா நன் வந்துடத கண்டுபிடிச்ச.. மாமா மேல அவ்வளவு ஆசையா டா..
நெனப்புதான்.. ஆசையும் இல்ல கீசையும் இல்ல.. உங்க வண்டி சத்தம் எனக்கு தெரியாதா.. ஆஹா ஹும்ம்ம் சார்??? ஷர்ட் எல்லாம் ஏன் இப்படி கசங்கி இருக்கு.. லேட் ஆ வந்ததுக்கு ஆபீஸ்ல பயங்கர வேலைன்னு நாங்க நம்பனும் அதுக்குதானே.. இது பாட்டி காலத்து பழைய டெக்னிக் டா கண்ணா..
சீ சீ.. உன் கிட்ட பொய் சொல்லி தப்பிக்க முடியுமா டி தங்கம்.. நீ எவ்ளோ பெரிய புத்திசாலி என்ன.. வேற எவனுக்கு கிடைக்கும் இந்த மாதிரி பொண்ணு சொல்லு.. இதுக்கு நன் தவம் பன்னிருக்கனுமடி மயுழு...
டேய் விக்ரமா!!!! என்ன கிண்டலாடா மாமா.... அப்பறம் காபி-ல உப்பு போட்டு குடுத்துடுவேன் ஆமா பார்த்துக்க.. இந்த மயிலு குயிலு எல்லாம் வேண்டாம் ஏன் லேட்னு காரணம் சொல்லுங்க..
சொல்லறேன் முதல்ல நீ கிட்ட வா..
ஊஹும்.. மாட்டேன் நீங்க அங்கிருந்தே சொல்லுங்க எனக்கு நல்லாவே காது கேட்க்கும்..
( *இப்படியே எல்லா பொண்ட்டாடியும் விவரமாய் அடம்பிடிச்சா லேட்- ஆ வர்ற புருசக்காரனெல்லம் எப்படி சமாளிக்கருதுன்னு தெரியலையே.. ஹும்ம் இனி ஆயுதத்த கைல எடுக்க வேண்டியது தான்..)
அட இங்க வாடினா.. இப்போதான் என்னமோ பெருசா சிலுபிக்கற.. நீ வர்ரயா.. இல்ல மாமா அங்க வரட்டுமா..
இல்ல... இல்ல... வேண்டாம்.. பக்கம் வந்தா பேச முடியாம வாய அடசுடுவிங்க...... நீ...ங்.. க.. மா..மா .... ### சரியாக 10 நிமிட இடைவெளி###
......
......
விடுங்கவிடுங்க... மூச்சு முட்டுது.
.....
சரி போ போய் தோச சுட்டு கொண்டடுவா மௌனி பசிக்குது..
( உணவு பரிமாறப்பட்டது.. விக்கமனும் மௌனியும் இரவு உணவை முடித்தாயிற்று)
(படுகையில் இருந்தவரே அவன் பூ வைத்துவிட மௌனி கேட்டாள்)
என்னங்க நான் ஏன் லேட்னு கேட்டதுக்கு இன்னும் பதிலே சொல்லல...
அதுவா ஒண்ணுமில்ல தினமும் பூ வாங்கபோவேன் இல்லையா.. அவ புலம்பல் தாங்கமுடியல...
ஏன் என்னவாம்ங்க அவங்களுக்கு..
நான் தினமும் நைட் ல வாங்கிட்டு வர்ற பூ எல்லாம் நமளோட அந்தரங்கத்த மத்த பூ கிட்ட சொல்லிடுசாம்.. அதுனால இப்போ எல்லா பூவும் காதலிக்க கத்துக்குச்சாம் டி..
ம்ம்ம்.... அப்படியா சங்கதி....நல்ல விஷயம் தானேங்க அதுக்கு போய் ஏன் புலம்பறா...
அதுக்கில்ல மௌனி... கட்டிவச்ச பூல ஒரு பூ கீழ உதிர்ந்தாலும் மத்தபூவும் அதோட சேர்ந்து உதிர்ந்திடுதாம் டி தங்கம்..
ஹும்ம் உம்ம்... விளயாடாமே ஒழுங்கா விசயத்த சொல்லுடா படவா...
ஹா ஹா ஹும்ம் விடமாட்டியே நீ.. வண்டி டயர் பஞ்சர்டி... அதன் மாமா தள்ளிட்டே வந்தன கொஞ்சமா லேட் ஆய்டுச்சு...
ஓ ஹூ... ஆ.. ஆ. ஆனா எனக்கு நேக வண்டிய ஓட்டிட்டு வந்து நிறுத்துன சத்தம் கேட்டதேங்க... பொய் சொல்லற பார்த்தியா.. டேய் விக்ரமா.. டேய்.. மாமா.. மாமா..
கொர்ர்ர்..... கொர்ர்ர்....
***** ***** *****
(போச்சுடா.. இப்போ எப்படி தப்பிக்க போறேன்னு தெரியலியே.. ஒருமணி நேர லைட்டுக்கு ஓவர் நைட் தொக்க விடமாட்டா போல இருக்கே ஈஸ்வரா... ஊர்ல ரெண்டு மூணு வட்சிருக்கரவனெல்லாம் சந்தோசமா இருக்காங்க.. ஒன்னே ஒன்ன வச்சுட்டு மான் படர பாடு இருக்கே. ஐயையோ.. அஹப்பா..)
*** நீகளாவது கரெக்டா சொல்லிடுங்க இல்லாட்டி பூ வாங்கிட்டு வந்தது வீணாயிடும் ***