சொர்கமும் நரகமும்
தலைக்கவசம் கொண்டு,
நாசியில் துணிகொண்டு
தூக்கம் துறந்து
தூசியில் துவண்டு
நதி போல ஓடிக்கொண்டு
சாரை சாரையாய்
வேக வேகமாய்
அதிகாலை ஐந்து மணிக்கே!
ஆதவன் கண்விழிக்கும் முன்பே!
ஒரு பயணம் தொடங்குகிறது இங்கே!
சிங்காரமாய் சிரிக்குது ஊரே !
அது ஒரு வஞ்சச் சிரிப்போ?
அசந்தால் ஆள் காலி
பசி வந்தால் பாக்கெட் காலி
ட்ராபிக்கில் சிக்கினால்
பெட்ரோல் காலி
மழை பெய்தால்
ரோடு காலி
பயமாய் தான் இருக்கிறது பார்பதற்கு
இருப்பினும்
அழகாய் இருக்கிறதே..
தனி தனி வீடு தான் ஆயினும்
கூட்டுக்குடும்ப சூழலில்-
அபார்ட்மெண்ட் வாழ்க்கை.
ஒரு போன் போட்டால்
கேட்டது வீட்டிற்கு வரும்
மந்திர வாழ்க்கை
இருட்டனாலும் பகட்டாய்
மிளிரும் ஒளி வெள்ளத்தில்
அயல்நாட்டு வாழக்கை
கண்கவரும் காதல் தேவதைகளை
தெருவில், வாகனத்தில், பேருந்தில், ரயிலில்
காணும் கனவு வாழ்க்கை
அடடா
வேற என்ன வேண்டுமடா
இது
சொர்கமும் நரகமும் கலந்த
மா நகரமடா!
சென்னை மகானமடா!!
-விஜய்கணேசன்