திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு

எங்கிருந்தோ வந்தால் இவள்,
கல்லூரி எனும் கோவிலுக்குள் மாணவியாக..
என் இதயம் எனும்,
கருவறைக்குள் தெய்வமாக.
அன்பில் அன்னையாக,
அரவணைப்பில் அப்பாவாக,
அக்கறையில் அக்காவாக,
தாலாட்டும் தங்கையாக,
என் உடலில் உயிராக,
அந்த உயிரே என்
உன்னத உறவாக,
அத்தனை உறவும்
ஒன்றாக அவளே,
என்றும் என் தோழியாக.
பார்பவர்கள் பேசலாம்
நமக்குள் இருப்பது தவறான
தொடர்பு என்று,
அவர்களுக்கு எப்படி
தெரியும் நம்
விரல்கள் கூட தொட்டு
கொண்டதில்லை என்று.
காண்பவர்களுக்கு தெரியாது
பெண்ணை விட
நட்பிக்கு உள்ள கற்பு
கங்கை விட புனிதமானது என்று,
காமம் இல்லாத கண்ணியமானது என்று.
உன் உறவு தொடர கூடாது என,
என் தோப்பில் கொடி உறவு சொன்னாலும்.
உன்னை தள்ளி வைக்க என்,
தாலிக்கொடி உறவு நினைத்தாலும்.
உன்னை உதறிவிட என்,
உறவுகள் எல்லாம் சொன்னாலும்.
கனவிலும் உன் நினைவுகள்,
வர கூடாது என கடவுள் வந்து சொன்னாலும்.
எப்படி புரியும் அவர்களுக்கு
நம் உறவின் புனிதம்.
நீ என்னிடம் பேசியதை விட,
எனக்காக பேசியது தான் அதிகம் என்று.
நீ என்னை பற்றி சிந்தித்த நாட்களை விட,
உன்னை பற்றி யோசித்த நாட்கள் குறைவு என்று.
நான் புத்துயிர் பெற,
உன் புன்னகை போதும்.
என் கண்ணீர் துடைக்க,
உன் கை விரல் போதும்.
என் கவலைகள் மறக்க,
உன் கால் கொலுசு ஒலி போதும்.
என் வருத்தம் போக்க,
உன் வளையலின் ஓசை போதும்.
என்னை வழி நடத்த,
உன் வார்த்தைகள் போதும்.
இவை மட்டும் போதும்மம்மா,
நீ மட்டும் போதும்.
இனியாவது மற்றவர்கள்
புரிந்து கொள்ளட்டும்,
இது உனக்கும் எனக்குமான உறவு,
அது ஆணுக்கும் பெண்ணுக்குமான
புனிதமான நட்பு என்று.

எழுதியவர் : அபிநயஸ்ரீ (2-Sep-15, 1:01 pm)
பார்வை : 180

மேலே