கற்புள்ள கவிதையாக

கற்புள்ள கவிதையாக..

நான் என்ற ஒருத்தி..
நீயென்ற ஒருவனுக்காய்..
போர்வையாக படைத்திருக்கயில்
நடுவில் எதற்கு
காதலும் ..
கத்திரிக்காயும்.. . .???

மறுமையிலும் மணமகளாய்..
நீயிருக்க ஆசை கொள்கிறாய்
உன் கணவனுக்கு -ஆனால்
மணக்க முன் ...
மனதை மட்டும் ..
மஹ்ரமில்லாத
மண்குதிரைகளில் - ஏனோ
மரணிக்கச் செய்கிறாய்....??

உள்ளத்தின் கற்பை இழந்து
விட்டு. .
கழாவில் உனக்காக
ஒருவன் இருக்கிறான்
என்பதை மறந்து விட்டு ..
கல்போடு நீ காணும்
பகல் கனவுகளும் கற்பனைகளும்
கரைந்து விடும்..
கண்ணீராய்....!!

பெண்மையென்பது உள்ளத்தில்
பூக்கும் பூ..
அந்தப் பூ ஒரு முறை ..
ஒருவனுக்காய்..
பூக்க வேண்டும்..
புன்னகைக்க வேண்டும்..
நீ மலர் கண்காட்சியில்
இருப்பவள் அல்ல..
மனம் எனும்
சாட்சியில் வாழ்பவள்...
மறுமையிலும் பேசும் அத்தாட்சிகள்..

உன் பாத நுனியில் இருந்து
பார்வை வரை பாதுகாத்திட வேண்டும்..
உன் எண்ணம் எனும் ஏட்டில்
ஈமானியக் காதல்
எழுதப்பட வேண்டும். .
உள்ளத்தாலும்
உனக்கு சொந்தமில்லாத
உரையாடல்கள்
தவிர்க்கப்பட வேண்டும் ..

நான் என்ற ஒருத்தி
நீயென்ற ஒருவனுடன் மட்டும்
வாழும் வாழ்க்கை அசத்தலானது..
அழகானது..
அன்பானது..
ஆழமானது..

உனக்காக என் உயிர்..
உனக்காக என் உடல்..
உனக்காக என் உள்ளம்..
உனக்காக என் உணர்வுகள்..
உனக்காக என் கனவுகள் ..கற்பனைகள் ..
உன் மடியில் என் மரணம்..
மறுமையிலும்
உனக்காகவே என் ஜனனம்..

தோழனாய் நீ
தோழியாய் நான்...
தோற்காமல் வாழ்ந்திட
தோரணை களை களைந்து விட்டு
காத்திருக்க வேண்டும். .
காதலுடன்..
உயிர்க் காதலுடன்..

நீ ஒருத்தன் யாரென்று நானறியேன்..
உருவமும் தெரியாது..
உள்ளமும் தெரியாது..
ஆனால் நான் காதலிக்கிறேன்..
உனக்காக என்னை நானே காதலிக்கிறேன்..
என்னை உன்னிடம்
தூயவளாய்..
தூவானமாய் ..
ஒப்படைக்கும் வரை
என் நகத்தின் நுனியும்..
அகத்தின் அழகும் பாதுகாக்கிறேன்..
பார்வை தாழ்த்திக் கொள்கிறேன்..
உனக்காக .. என் கணவன் உனக்காக..

உன் மாளிகையின் மல்லிகையாய்..
மணக்க முன்னரும்
உன் மணமகளாய்..
மனதில் திருமறை ஏந்தி..
மதியாய்.. வளர்மதியாய்..
நான் என்ற ஒருத்தி
நீயென்ற ..
ஒருவனுக்காய் காத்திருப்பேன்.
காலமெல்லாம் கல்பிலும்
கற்புள்ள கவிதையாக....

எழுதியவர் : கியாஸ் கலீல் (2-Sep-15, 1:42 pm)
பார்வை : 80

மேலே