மனிதா

மனிதா
காரிகை விழிகளின் கருணை மலர்கள்
காணாதே தொலைந்ததுவோ
கருணையில் முளைத்த பாசமும்
கருவறுத்து செல்கிறதோ
கருவிழிகளில் காரிகை ததும்பும் கருணை மலர்கள்
காணாமல் கருவறுந்ததுவோ
மனிதம் தொலைந்து மானிடம் உயிர் பிழைகிறதோ
மனிதனும் மனித நேயம் தொலைத்து இங்கு உயிர் வாழ்வது ஏனோ
உணர்வயா உலகே
புவியும் தன்னை அழிக்கும் மனிதனை
மறக்காது மரிக்கும் பொழுதிலும்
உம்மை காக்கிறதே
நீரோ வந்த கடமை மறந்து மனிதம் தொலைத்துஇங்கு உழல்வது ஏனோ ?