நீயும் நானும்
நீயும் நானும்
பார்த்தபோது
நிலவும் பார்த்ததோ
நானும் நீயும்
கைகோர்த்து நடந்த போது
கால் தழுவிய கடலலைகள்
தயங்கி நின்றதோ
நீ வராத நாட்களில்
நான் தனியாக நடக்கும் போது
இன்று போய் நாளை வா
என்கிறது கடலலைகள்
போனவள் அலைபோல்
திரும்பி வருவாள் என்கிறதா ?
நம்பிக்கைதான்
கடலலைகள் எனக்கு
நம்பிக்கைப் புத்தகம்
உன் கனவுகள்
எனக்குக் கவிதைப் புத்தகம்
இரண்டையும் நெஞ்சில் ஏந்தி
தனிமையில் நான் ....