அயனுக்கு பிரம்மன் கேள்விக்கணை

அயனிடம் 20 கேள்விகள் (கேள்விக்கணை )
**********************************************

1. பாண்டவராம் ஐம்புலர்க்கு பகையும் ஐம்புலனே ! இதுவும் நீ விதித்ததே
2. விண் அதிர வான் ஆய்ந்தும் மண்நகர தாங்காது ! இதுவும் நீ விதித்ததே
3. விண்ணிலே தென்கிநிர்க்க நீருக்கு வழியில்லை ! இதுவும் நீ விதித்ததே .
4. கொள்ளைக்கு கல்வியும் கொள்ளை நோய் வைத்தியம் ! இதுவும் நீவிதித்ததே
5. ஒருபள்ளி கல்விக்கும் மருபள்ளி கலவிக்கும் ! இதுவும் நீவிதித்ததே .
6. ஒருகண்ணில் நீர்வழிய மறுகண்ணில் தீபறக்க ! இதுவும் நீவிதித்ததே
7. அமைதியான பக்தியும் பரவசமாய் போனது ! இதுவும் நீவிதித்ததே .
8. ஒருகல்லில் அளவுநிலை மருகல்லில் தெய்வநிலை ! இதுவும் நீவிதித்ததே .
9. ஒருமங்கை கற்புக்காய் மருமங்கை ஏற்புக்காய் ! இதுவும் நீவிதித்ததே .
10. உருவத்தில் ஒருபங்கு சிவனுக்காய் மருபங்கு சக்திக்காய் ! இதுவும் நீவிதித்ததே .
11. பாற்கடல் மாலுக்காய் கருங்கடலோ சுனாமிக்காய் ! இதுவும் நீவிதித்ததே .
12. உறும்பணம் பெறுதற்காய் பெரும்பணம் அழிவுக்காய் ! இதுவும் நீவிதித்ததே
13. ஆர்த்து எழும் ஆண் இனமும் அடங்கிவிடும் பெண் குணமும் ! இதுவும் நீவிதித்ததே
14. இருப்போர்க்கு புத்தியில்லை இல்லார்க்கு கல்வியில்லை ! இதுவும் நீவிதித்ததே .
15. கண்டுவிட கண்களும் கொண்டுவிடும் காமமும் ! இதுவும் நீவிதித்ததே .
16. ஒருபால் கிள்ளைக்காய் மறுபாலோ உறவுக்காய் ! இதுவும் நீவிதித்ததே .
17. திருமால் காப்பதற்காய் மறுமால் பணிகளுக்காய் இதுவும் நீவிதித்ததே .
18. பொய்யே அது மெய்யாம் மேயுமதும் பொய்யாம் ! இதுவும் நீவிதித்ததே .
19. பக்தியோ உன்மீது சக்தியோ அதன்பலனே ! இதுவும் நீவிதித்ததே .
20. விதிப்பது நீயாயின் உறுகதிக்கு உலகோரே !

அயனே தேவை பரிசீலனை இவ்வைய்யம் இன்புறவே .


அய்யனே என் பிரம்மனே இருபத்து கேள்வியிட்டு
மெய்யான கருத்தென்று சிலவற்றை இவன் உதிர்த்தான்
பொய்யான கருத்தென்றால் ஒதுக்கியே தள்ளிவிடு
மெய்யென நீநினைக்கின் ஒதுங்காது முன்வந்து - நீ
ஈய்ந்த இவ்விதிகள் தொடரவோ மாற்றவோ பரிசீலனை செய்துவிடு .

. **************

எழுதியவர் : சக்கரைவாசன் (2-Sep-15, 8:00 pm)
பார்வை : 77

மேலே