புதுவேந்தன்

மன்னன் தன்னவளை
அழைத்தான்..."என்னவளே
உன்னிலும்...அதிசயம்
யான் காணோம்....
உண்டெனில்....அதனினும்
உன்னை சிறப்பித்து...
உலகறிய செய்வேன்....
கனங்குழாய்...இதழ்
விரித்தாள்..என்னவரே
நின் மனம்..கண்டு
உள்ளம்..கலங்குதே...
என்னவரின் மனமன்றோ..
என்னிலும் அதிசயம் ...
பேரதிசயம்....
உன்னடி உயிர்களின்
ஆனந்தம். .கண்டேனே...
பூவுலகின் புதுவேந்தன்..
நின் புகழ் காண்பதே
உன்னவளின்..உயிராசை....
பதில்மொழி...கேட்ட
மன்னவன்..இணையில்லா
இணை ....இவளே.
எண்ணி மகிழ்ந்தான்..
தென்றலில் கலந்த
உயிர் அன்பினால்..
வான்மேகம்..மலைத்து..
மழையாக மலைத்தது...

எழுதியவர் : raamki (2-Sep-15, 10:20 pm)
பார்வை : 109

மேலே