காதலியே தேடி

நிரந்தரமில்லா இந்த உலகில்
உன் பிரிவு
நிரந்தரமாகி போனால்
நிராகரிப்பேன் இந்த உலகையே

உன் நினைவுகள நிரந்தரமாக்கிய
நீ
ஏன் வாழ்க்கையும் நிரந்தரமாக்கு
உன் மடியினில்

நினைவுகளுடன் மட்டும்
நிரந்தரமாக வாழ
நான்
நிதர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல

உன் நினைவுகளையும் நிதர்சனமாக்கி
நித்திரை இல்லாமல் வாழ
நெஞ்சில் என்னை விதைத்து
நிறைவாக முளைத்தெழு
முல்லை மலராக
என் உயிரே.........

எழுதியவர் : அரவிந்தன் (3-Sep-15, 6:58 pm)
Tanglish : kathaliye thedi
பார்வை : 303

மேலே