பட்டாம் பூச்சி
பலவண்ண பட்டுடுத்தி
சிறகடிக்கும் சிங்காரமே
உன்னிடத்தே மயங்காத
மனம் என்று ஒன்றுண்டோ
தூரிகையில் வரையாத
ஓவியங்கள் உன் சிறகில்
எண்ணத்தில் தோன்றாத
வண்ணங்கள் உன் அழகில்
கற்பனை படைப்புக்கு
நீ தானே கவியருவி
மழலையின் விழிகளுக்கு
இமைகளாம் உன் சிறகு
சிறார்கள் விளையாட்டில்
நாட்டமாம் உன் ஆட்டம்
காதலரின் இதயத்து
வேகமாம் உன் ஓட்டம்
மென்மைக்கு மெருகேற்றும்
ஆற்றலாம் உன் தோற்றம்
நீ வந்து மேல் அமர
சிலையாய் தவம் கிடந்தோம்
மலர் விட்டு செல்கையிலே
மனம் தொட்டு பின் தொடர்ந்தோம்
கற்பனைக்கு விரிவு தந்த
வண்ணத்து பூச்சியே
உன் வாழ்க்கை சுருங்கியதே
ஒரே ஒரு மாதத்தில் . . . .