யதார்த்த வாழ்க்கை

நல் நட்புக்கேது களங்கம்
ஆயினும்,

உற்றவளின்
உரிமையின் உச்சம் என்ற ஏக்கம்,
தலைவன் தனக்கானவன் என்ற ஆசை,
என்னவன் எனக்குரியவன் என்ற இன்பம்,
இவை
எல்லாம் இல்லாழின் இயற்க்கை.

நட்பில் களங்கமின்றி காலம் செல்லலாம்
நடைமுறையில் கலகமின்றி இல்வாழ்வு செல்லாது.

இல்வாழ்வின் கலகம், களங்கமாகாமல் இருக்க
இல்லாழின் இயற்க்கை இன்றியமையாதது.

கன்னி ஒருத்தி கணவனின் கைகோர்க்கும் போது
அவளின் அடி மனதில்
அவளுக்கு அர்த்தமாய்
அவளன்றி அனைவருக்கும் அர்த்தமற்றதாகும்
அப்படியொரு ஆதங்கம்
அதை
முகம் மறைத்தாலும்
அகம் மறைக்காது
ஏனெனில் அகத்தில் அவன்

அவள் ஆதங்கமும்
அன்பின் வெளிப்பாடுதான்
ஆயினும்
அவனுக்கு அர்த்தமற்றது

இங்கு
அவள் ஆதங்கம் அவளுக்கே ஆயுதமாம்

அவனுக்கோ
இக்கரைக்கு அக்கறை பச்சை எண்ணம் உயிர்த்தெழும்

உற்றவளின் உரிமை உயிர் பிடுங்கும்
தோழியின் தோள் உயிர் கொடுக்கும்

இக் கலகத்தின் உயிர் பிரியும்
அக் களங்கத்தின் உயிர் பிறக்கும்

அவனுக்கு மருந்துதான்
ஆனால்
அவளுக்கே நஞ்செயாகும்

நடைமுறையின் எதார்த்தமே
நல்வாழ்வாகும்
நட்பில் களங்கமில்லை என்றாலும்
நல்வாழ்வில் களங்கம் கூடாது

தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இது

எல்லாவற்றிக்கும் எல்லை உண்டு இதற்கும் தேவை ........

எழுதியவர் : அரவிந்தன் (4-Sep-15, 2:10 pm)
பார்வை : 286

மேலே