பரவசப் பக்கத்தில் படர்ந்தவள் - தேன்மொழியன்

பரவசப் பக்கத்தில் படர்ந்தவள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பூக்கள் மலராதப் பொழுதிலும்
தாவணிக்கு வாசமளித்து
மருதாணி வைத்த கைகளை
மங்கிய ஒளியில் முறைக்கிறாய் ....

தனித்து வீசிய வளையலின்
உடைந்துப் போன வட்டங்களை
சித்திரக் கலையின் சுவடுகளாய்
நடுநிசி இரவில் வரைகிறாய் ...

சமைத்து முடித்த கணத்தினில்
நிறைந்துப் பொங்கிய நுரைகளில்
ஒப்பனையற்ற முகம் ரசித்து
ஒவ்வொரு ரகத்திலும் ருசிக்கிறாய் ..

சுவரைச் சுற்றியப் பாதையில்
அரும்பிய புல்லின் நுனிதனில்
அழகிய தேகம் தைத்தவளாய்
பரவசப் பனித்துளிக்குள் பறக்கிறாய் ..

- தேன்மொழியன்

எழுதியவர் : தேன்மொழியன் (இராஜ்குமார்) (5-Sep-15, 7:43 am)
பார்வை : 160

மேலே