நான் ஒரு நல்ல டீச்சரில்ல

டென்த்ல தான் அந்தப் பிரச்னையை எழுப்பினாங்க ப்ரேமலதா மிஸ். "யாரெல்லாம் ட்யூஷன் போறீங்க? எழுந்து நில்லுங்க." நான்கைந்து பேரைத் தவிர மொத்த வகுப்பும் எழுந்து நின்றது. "இனிமே ட்யூஷன் போகக் கூடாது. வீட்டிலிருந்தபடி தான் படிக்கணும்" அப்படின்னு ஏற்கனவே ஸ்டிரிக்ட்டான அவங்க முகத்தை இன்னும் கடுமையாக்கி சொல்லிட்டு உக்காரச் சொன்னாங்க. என்னடா இவ்ங்க வேற இப்படி சொல்ட்டாங்களேன்னு மாலை ட்யூஷனுக்குப் போய் சார்ட்ட சொன்னா அதெல்லாம் கண்டுக்காத நீ வான்னார். அடுத்த வாரம் மறுபடி அதே கேள்வியக் கேட்டாங்க, என்னோட பாதி க்ளாஸ் எழுந்து நின்னுது.

"ம்ம்ம்... அப்ப இன்னமும் நீங்க ட்யூஷனுக்குப் போறீங்க. அப்ப நான் சொன்னதுக்கு என்ன மரியாதை? மரியாதை இருக்கட்டும், அப்ப நான் உங்களுக்கு சரியா சொல்லிக் கொடுக்கலைன்னுத் தானே அர்த்தம். நா சரியா இருந்தா நீங்க ஏன் அங்க போகப் போறீங்க? நான் ஒரு நல்ல டீச்சரில்ல. நான் சுத்த வேஸ்ட்" இல்லிங்க மிஸ் அப்டில்லாம் இல்ல. பின்ன உங்க இந்த நடவடிக்கை நான் ஒரு ஆசிரியரா லாயக்கில்லாதவள்ங்கறதைத் தான் காட்டுது. உங்களுக்கு உண்மையிலேயே என் மேல நம்பிக்கையிருந்தா, நான் உங்கள சரியான, நல்ல பாதையில் கூட்டிப்போவேன்ற எண்ணமிருந்தா இன்னியோட நிறுத்துங்கன்னாங்க.

அன்னிக்கு சாயந்தரம் நேரா வீட்டுக்குத் தான் போனேன். எப்பவுமே கணக்குன்னா நடுங்கற ஆள் அவங்களோட மாலை சிறப்பு வகுப்புகள் மூலம் 93% வாங்கினேன். அஞ்சு வயசிலிருந்தே ட்யூஷன் உதவியில்லாம படிக்க முடியாதுங்கற எண்ணத்தை மாத்தி தன்னம்பிக்கையும், நேர்மையையும், விடாமுயற்சியையும் சொல்லித் தந்து வெற்றிக்கும் வழி காட்டிய ப்ரேமலதா மிஸ் நினைவு தான் வரும் ஒவ்வொரு ஆசிரியர் தினத்துக்கும்.

எழுதியவர் : Anitha N Jayaram (5-Sep-15, 7:05 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 410

சிறந்த கட்டுரைகள்

மேலே