பாய்ந்து கொல்
![](https://eluthu.com/images/loading.gif)
மெல்ல மெல்ல
காதலைத் தள்ளி
சென்றாய் என்
இருதயம் கிள்ளி..
கரையே நுரையே
அலையே கடலாய்
இழுத்தாயே..!!
என் வானில்
முகிலாய் சென்றாய்
என் காதல்
முழுதும் தின்றாய்..
மெழுகாய் உருகி
திரியாய் கருகி
நின்றேனே..!!
பூ மணமே
தேன் குணமே
பிரிவால் எனையும்
எரிப்பாய் தினந்தினமே..
இதமாய் இல்லா உன்
மெளனம் முள்ளா
தவியாய் தவிப்பேன்
தளிரே..!!
மடியும் பொழுதில்
மனம் வாடுமடி
மலராய் உதிர்வேன்
தனியே..
விடியும் பொழுதில்
விழி தேடுமடி
இரவே போதும்
இனியே..!!
ஈர மேகமது
ஓரம் போகிறது
காற்றின் சதியோ..?
ஓர இமைகளது
ஈரம் ஆகிறது
காதல் வலியோ..?
விதையில்லாப்
பூக்களும் நானோ
மணமில்லா
நாட்களும் ஏனோ..?
கல்லாய் மலையாய்
சிலையாய் மரமாய்
நின்றாயே..!!
உன் கண்கள்
உயிரை சிந்தும்
அதை பிடிக்க
உடலும் முந்தும்..
இரவும் பகலும்
இடியில் பனியில்
காப்பேனே..!!
நீ இல்லா
தினங்கள் எல்லாம்
தீ இல்லா
தீபவிளக்காய் காத்திருப்பேன்..
சுவையே சுடராய்
என்னை சூழ்ந்து கொள்
இல்லை என்றால்
காதலற்ற அம்பினால்
என்னை பாய்ந்து கொல்..!!
செ.மணி