உன்னை நினைத்துக் கொண்டிருக்கின்றேன்

கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருக்கிறேன்
தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறேன்
சமையல் செய்து கொண்டிருக்கின்றேன்
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்
படித்துக் கொண்டிருக்கிறேன்
சும்மாதான் இருக்கின்றேன் லூசு சொல்லுங்க

இப்படியாகதான் பதிலுரைப்பாய்
இறுதியில் ஒரு லூசையும் சேர்த்து
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்ற
என் கேள்விகளுக்கு அப்போதெல்லாம்

இப்போது நீ
ம்ம்.. தெரியும்
உன் கணவனோடு பேசிக் கொண்டிருப்பாய்

ஆனால்
நானோ...?
அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி
எனக்கென்னவோ ஒரே வேலைதானடி
ஆமாம்
"உன்னை நினைத்துக் கொண்டிருக்கின்றேன்"

எழுதியவர் : மணி அமரன் (4-Sep-15, 11:25 pm)
பார்வை : 1008

மேலே