காதல் தோல்வி 2 வரிக் கவிதைகள்

அவள் சுமந்தாள் மணமாலை
எனது நெஞ்சம் இப்போது பாலை..

அவள் புரிந்தாள் மணம்
சோகத்தில் இறந்தது மனம்..

காதலன் என் ஏழை வயிறு பசித்தது
சென்றேன் பணக்காரக் காதலியின் திருமணப் பந்திக்கு

அப்போது அகத்திணை
இப்போது புறத்திணை

நால்வகை நிலங்களை நமதாக்கினோம்
இப்போது கள்ளி முளைத்த பாலையில் எனக்குப் பால் ..

அப்போது கவிதை
இப்போது ஒப்பாரி

நினைவுகளின் காதல் எதுகையில் நான்
குழந்தையின் அழுகை மோனையில் நீ

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (4-Sep-15, 10:24 pm)
பார்வை : 832

மேலே