சிக்னல்
பலர் பச்சையை எதிபார்த்து
சிறுநீர் கழிக்கும் கார்களும்,
வியர்வை சிந்தும் ஹெல்மட்டுகளும்,
நேரம் எப்பொழுதும் அவசரமாக சுற்றுவதில்லை
நமக்கு நிதானமில்லை என சொல்கிறது எழுப்பும் ஒலி,
மாசுக்கு பஞ்சமில்லை அங்கு....
சிலர் சிவப்பை எதிர்பார்த்து
வாய்ப்பாடு புத்தகத்தை வாய் விட்டு
விற்கும் சிறுவனும்,
தலைத் தொங்கிய கைக்குழந்தை
தாயின் வயிற்றை நிரப்பும்
தன் உணவை விடுத்து,
காருக்குள்ளே வெயில் படாமலிருக்க
வெளியே கால் சுட தட்டிக்கொண்டிருப்பான்,
பசிக்கு பஞ்சமில்லை இங்கு.....
மங்கலமான மஞ்சள் பலருக்கு,
சிலருக்கு மங்கலாக மாறும் !!
சிவப்பு, பச்சை , மஞ்சள் மாறினாலும்
சிலரின் நிலை மாறவில்லையே !!!!