காலம் காலம் கலாம்

இசுலாத்தின் ஏசுவே உங்களை
ஒவ்வொரு வினாடிக்கு ஓர் முறை
ஒவ்வொரு இளைஞனுள் உயிர்த்தெழுவாய் !!
இன்று மோகன்தாஸ் கரம்சந்த் இருந்தால்
கலாமாக இருக்க ஆசை மட்டுமே பட்டிருப்பார்,
பூமியை பார்த்தவனை
ஆகாசத்தை பார்க்கவைத்தாயே ,
எங்களிடம் கனவுப் பாலை பருக வைத்'தாயே'!!
உங்கள் எண்ணத்தின் வானில்
இந்தியாயெனும் பிறை வளரும்,
ஐய்யம் வேண்டாம் அயர்ந்து உறங்குங்கள்
உங்கள் உள்ளொளியின் பிரகாசம் உறங்காது !!
விதைத்தவர் உறங்'கலாம்'
விதை உறங்காது !!

எழுதியவர் : பவித்ரன் (5-Sep-15, 11:06 pm)
பார்வை : 82

மேலே