இறைவழி மறைநெறி

இறைவழி மறைநெறி
********************************************

இறை தந்த மறை உந்தும் நெறி ஓர்ந்து நின்றுவிட
இறை நேர வழிஉண்டு இரை வேறு வேண்டுவதோ ?
பாறையாம் கல்மனதும் கரைந்திடும் சக்தியதில்
குறையில்லை என்றென்றும் நிறைவேறும் எண்ணங்கள் !

சாரையாய்த் தொடராது துன்பங்கள் அற்றுவிட
கறை ஏதும் நேராதே வாழ்வின் இறுதிவரை
இறை வழி மறை நெறி மறை வழி இறை நிறை
முறை வழி உரை மறை பறை அறை இறை அறைக்கே !

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Sep-15, 10:44 pm)
பார்வை : 73

மேலே