சாதகமும் போதகரும் horoscope and astrologers

சாதகமும் போதகரும் (horoscope and astrologers )
*****************************************************************************

சாதகம் ஆம் சாதகங்கள் சாதகமாய் இருந்துவிட !
சாதகத்தில் பாதகமாம் சாதகங்கள் நல இன்றேல் !!
போதிமரப் புத்தராய் சாதகப் போதகர்கள் !
போதும் என்றில்லாது நிறைந்தாரே இப்புவியில் !!

ஓதுவார் பலவிதமாய் ஆதங்கப் பேர்வழிக்கே
ஊதுவார் தீயதனை பரிகாரம் எனும்வழியே
ஏதுமே நிகழாது பரிகாரம் சென்றவழி
பூதகமாய்க் காதகர்கள் சாதகர்கள் மத்தியிலே !!

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Sep-15, 11:10 pm)
பார்வை : 62

மேலே