சின்னசாமியும் பெரியசாமியும்

சின்ன சாமி வந்தாரே
சிவப்பு விளக்கில் நின்றாரே
பச்சை விளக்கில் சென்றாரே
பக்கம் பார்த்துக் கடந்தாரே

பெரிய சாமி வந்தாரே
பச்சை சிவப்பு மறந்தாரே
வேகம் வேகம் என்றாரே
விரைந்து சாலை கடந்தாரே

சின்ன சாமி முன்பாக
பெரிய சாமி சென்றாரே
ஏளன மாகச் சிரித்தாரே
இன்னும் வேகம் எடுத்தாரே

எதிரே வந்த வாகனத்தில்
இடித்துக் கீழே விழுந்தாரே
அய்யோ அம்மா என்றாரே
அழுது புலம்பித் துடித்தாரே

வேகம் வேகம் தவறென்று
பெரிய சாமி உணர்ந்தாரே
சின்ன சாமி வாகனத்தில்
வீடு சென்று சேர்ந்தாரே

- ஷான்.
‪#‎குழந்தைப்பாடல்‬
வெங்கடேஷ் ஆறுமுகம்

எழுதியவர் : செல்வமணி (6-Sep-15, 11:20 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 51

மேலே