மானிடனே
![](https://eluthu.com/images/loading.gif)
ஓ மானிடனே...
நீள்கடல் அலைகளைப்பார்
முடியாது என
அனுபவத்தில் தெரிந்தும்கூட
ஓங்கி எழுந்து விண்ணைத்தொட
வீரியமாய் முனைவதை...
சுழன்றடிக்கும் காற்றைப்பார்
முடியாது எனத்தெரிந்திருந்தும்
புவியை அசைத்திட
ஆவேசமாய் முயல்வதை...
அதிர்ந்து வரும்
காட்டாற்றைப்பார்
முடியாதெனப் புரிந்திருந்தும்
மலைகளைத் தகர்த்திட
உக்கிரமாய் முனைவதை...
ஆனாலும் மானிடனே
அனைத்தையும்
ஆய்ந்தறியும்
ஆறறிவு மானுடத்தைப்பார்...
முடியும் எனத்தெரிந்திருந்தும்
சகுனம் சரியில்லை என
நெடுமரமாய் சோம்பிக்கிடப்பதை...