உன் விழி கான

என்னை தேடும் விழியே உன்னை காணும் வழியென்ன....

விழியெங்கும் கண்ணீர் கூட்டம் மேடைக்கு மேடை நம் காதல் பேச்சு (ஓயாமல் துடிக்கும் இதயத்தில்)....

வலி தாங்கி.... விரல் ஏந்திய என் கை குட்டை நனைந்து போனது....


தனிமை தனிமை என்றானது இனிமையாய் பேசிருந்த நொடிகள் எல்லாம்....

சித்தரித்துக் கொண்டேன் நீ கொடுத்த பரிசுப் பொருட்களை எல்லாம் நீயாக.....

ஓயாமல் பேசி தீர்த்தேன் தனிமையில் மனநிலைப் பாதிக்கப்பட்டவன் போல்....

சிரித்திருந்தது ஒரு கூட்டம்....

தவித்திருந்தது ஒரு கூட்டம்....

காதல்...
சிலருக்கு இதில் வேதனை....

சிலருக்கு இதில் சோதனை....

சிலருக்கு இதில் பயம்....

சிலருக்கு இதில் அனுதாபம்....

சிலருக்கு இதில் கோபம்....

சிலருக்கு இதில் ஏளனம்....

சிலருக்கு இதில் ஆர்வம்....

சிலருக்கு இதில் ஆசை....

சிலருக்கு இதில் பேராசை....

சிலருக்கு இதில் இன்பம்....

சிலருக்கு இதில் துன்பம்....

சிலருக்கு மட்டும் தான் காதல் காதல்....

சிதறி கிடக்கும் இந்த நொடிகளை
மரணம் வந்தாவது சேர்த்து விடுமோ....

என் அருகில் உன்னை சில நேரம்....
























!...உன்னோடு நான் உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (7-Sep-15, 11:58 am)
சேர்த்தது : தர்ஷா ஷா
பார்வை : 132

மேலே