புதிர் கணக்கு - 3

ஒரு மலையின் கீழிருந்து உச்சி வரை மூன்று அதிசய கோவில்கள் உள்ளன..

அந்த கோவில்களில் நுழையும் போது உங்களிடம் உள்ள பணம் இருமடங்காகும்... வெளியேறும் போது கோவிலுக்கு காணிக்கையாக ஆயிரம் செலுத்த வேண்டும்...

இவ்வாறு மூன்று கோவில்களையும் கடக்க வேண்டும்.. கடைசியாக வெளியேறும் போது உங்களிடம் பணம் ஏதும் இருக்க கூடாது... எனில் எவ்வளவு எடுத்து செல்வீர்கள் என்பதே கேள்வி.?


875 ரூபாயோட கோய்லுக்கு போனோம்னு வச்சிக்குங்க,
அந்த பணம் முதல் கோயில்ல நுழைஞ்சதும் 1750 ரூபாயா ஆகிடும்!

அதுக்காக அங்க இருக்குற சாமிக்கு ஒரு தேங்ஸ் சொல்லி ஒரு ஆயிரத்த உண்டியல்ல போட்டுட்டு,

பாக்கெட்ட பாத்தா நம்மகிட்ட இப்போ 750 ரூபாய் இருக்கும்.

அப்டியே அடுத்த கோயிலுக்கு போறோம்,போனவுடணே 750 ரூபா 1500 ரூபாயா ஆகிடுது!!

அப்பனே முருகா உலகம் நல்லாருக்கனும்னு சாஷ்டாங்கமா விழுந்து சேவிச்சு,
எவனும் நம்மள முதுகுல ஏறி மிதிக்கிறதுக்குள்ள டக்னு எழுந்திருச்சு,
அங்க இருக்குற உண்டியல்ல ஒரு ஆயிரத்த போட்டோம்னா...

நம்மகிட்ட 500 ரூபா மிஞ்சும்

அப்டியே கடைசி கோயிலுக்கு போறோம் பாஸ்
அங்க போனதுமே ஐநூரு ஆயிரமா ஆகிடுது,அங்க இருக்கு சாமிக்கும் ஒரு கும்புட போட்டுட்டு

அந்த ஆயிரத்தையும் அப்டியே உண்டியல்ல போட்டுட்டு,சுன்டல்,பொங்கல் எதுனா கொடுத்தாங்கன்னா வாங்கி சாப்டுட்டு
போய்ட்டே இருக்க வேண்டியதுதான்,கணக்கு சரிதான பாஸ்.

எழுதியவர் : செல்வமணி (8-Sep-15, 11:03 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 2340

சிறந்த நகைச்சுவைகள்

மேலே