கூட்டு முயற்சிக்கு ஒரு தவறான உதாரணம்
கூட்டு முயற்சி என்பது எப்படி இருக்கக்கூடாது
என்பதற்கும் பல்வேறு உதாரணங்கள் இருக்கிறது.
ஒரு விடுமுறை நாளில் நான் வீட்டின் வாசற்புறம்
உட்கார்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தேன்.
தெருவில், ஒருவன் வரிசையாக குழிகள் பறித்துக்
கொண்டு சென்று கொண்டிருந்தான். பின்னர்
ஒருவன் ஒவ்வொரு குழிக்குள்ளும் தண்ணீர்
ஊற்றிய படியே சென்றான். பின்னர் மூன்றாமவன்
அந்த குழியை மூடிவிட்டு அடுத்த குழியை நோக்கி
சென்றான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. மூன்றாமவனிடம்
சென்று அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்
எனக் கேட்டேன்.
நால்வர் சேர்ந்து மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ்,
'செடி-நடும்' கடமைகளைச் செய்து கொண்டு
செல்வதாகச் சொன்னான். அவன் சொல்வது
உங்களுக்கு புரிகிறதா? எனக்கு ஒன்றுமே விளங்க
வில்லை.
நான் அவனிடம் கேட்டேன் "செடி இல்லாமல் இது
எப்படி சாத்தியம்?" என்றேன். அதற்கு அவன் சொல்லிய
பதில், "ஐயா, நாங்கள் மொத்தம் நால்வர் இப்பணியில்
ஈடுபட்டுள்ளோம். முதலில் சென்றவர், குழி வெட்டுவார்,
பிறகு இரண்டாமவர் செடிகளை நடுவார், மூன்றாமவர்,
தண்ணீர் ஊற்றிக்கொண்டு செல்வார். பிறகு அந்த
குழியை மூடுவது என் கடமை ஆகும்.
எங்களில் இரண்டாமவருக்கு இன்று உடம்பு சரியில்லை,
ஆதலால் அவர் வர இயலவில்லை. அவர் இல்லாவிட்டாலும்,
நாங்கள் எங்கள் கடமைகளை செய்யாமலிருக்கலாமா?"
என்றானே பார்க்கலாம்,நான் வயிறு வலிக்க வலிக்கச் சிரித்தேன். இது 'கூட்டு
முயற்சிக்கு' ஒரு தவறான உதாரணம் அல்லவா? -
=======
நன்றி: கழுகு.காம்