ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

குக்கிராமம் ஒன்றில் வேலன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் வீட்டில் பல ஆடுகளை வளர்த்து வந்தான். அந்த வாரம் செவ்வாய்க்கிழமை சந்தையில் செம்மறி ஆடு ஒன்றை வேலன் வாங்கி வந்தான்.

செம்மதி ஆடு கொழு கொழுவென்று மிகவும் அழகாக இருந்தது. அதனால் வேலனுக்கு அதன் மேல் அதிக பிரியம் ஏற்பட்டது. அதனை நன்கு கவனித்துக் கொண்டான். அதனால் மற்ற வெள்ளாடுகள் அதன் மீது பொறாமை கொண்டன.

“இந்த செம்மறி ஆடு மூக்கும் முழியுமாக அழகாக இருக்கிறது. அதனால் நம்மை கவனிக்காமல் இந்த செம்மறி ஆட்டை அல்லவா? வேலன் நன்கு பார்த்துக் கொள்கிறான்” என்று கருதிய ஆடுகள், செம்மறி ஆட்டை தங்களுடன் சேர்த்துக் கொள்ளவில்லை.

ஒன்றாக சேர்ந்து கொண்டு செம்மறி ஆட்டை விரட்டி விரட்டி முட்டின. எப்போதும் சண்டைக்கு அழைப்பதுபோல் முறைத்துக் கொண்டு செருமின. வேலன் ஆடுகளுக்கு தண்ணீர் வைத்தான்.

உடனே ஆடுகள் முண்டியடித்து கொண்டு வந்து தண்ணீரைக் குடித்தன. கூடவே செம்மறி ஆடும் தண்ணீரைக் குடிக்க வந்தது. பொறாமை பிடித்த வெள்ளாடுகள், செம்மறிக்கு இடம் தராமல் மறித்துக்கொண்டு தண்ணீர் குடித்தன. செம்மறி ஆடு பசியெடுத்துப் போய் மீண்டும் மீண்டும் தண்ணீர் பருக முயற்சித்தது.

அதனால் மற்ற ஆடுகள் செம்மறி ஆட்டை முட்டித் தாக்கத் தொடங்கின. இந்த சண்டையில் தண்ணீர் தொட்டியில் வைத்திருந்த கஞ்சி சிந்திவிட்டது. செம்மறி ஆடு பட்டினியாய் கிடக்க வேண்டியதாய்ப் போய்விட்டது.

சிந்திய சோற்றுப் பருக்கைகளை சாப்பிட எறும்புகள் சாரை சாரையாய் ஊர்ந்து வந்தன.

ஆடுகள் சண்டை போட்டுக்கொண்டு மூலைக்கொன்றாய் நிற்பதைப் பார்த்து, எறும்புக்கூட்டம் “ஹ்ஹ ஹா” என்று சிரித்தது.

“எங்கிருந்தோ சிரிப்பொலி வருகிறதே?” என்று கவனித்த ஆடுகுள் எறும்புகள் கூட்டமாக நின்று சிரிப்பதை அறிந்தன.

“ஏய் எறும்புகளா? நாங்கள் உருவத்தில் பெரியவர்கள். எங்கள் நகத்தின் அளவுகூட இல்லை. நீங்கள் எங்களைப் பார்த்து சிரிக்கிaர்களா?” என்று ஆடு கேட்டது.

“நீங்கள் உருவத்தில் பெரியவர்களாக இருந்து என்ன செய்வது. உணவைக்கூட உங்களுக்குள் பகிர்ந்து சாப்பிடத் தெரியாத மூடர்களாய் இருக்கிaர்கள். ஒரே கூட்டில் வாழும்போது கூட அடித்துக்கொள்கிaர்கள். இதுதான் பெரியவர்கள் குணமா?” என்று இளக்காரமாக கேள்வி கேட்டது எறும்புத் தலைவன்.

வெட்கத்தால் தலைகுனிந்து நின்றன ஆடுகள்.

“நீங்களும் எங்களை மாதிரி ஒற்றுமையாக இருந்திருந்தால் இப்படி முட்டி மோதி, கிடைத்த உணவைக் கூட வீணாக்கி இருப்பீர்களா? தனியே நிற்கும் செம்மறி ஆட்டை இப்படி ஒன்றாக சேர்ந்து கொண்டு தாக்குகிaர்களா? அது தவறல்லவா? உயிர்களைக் கொல்வது பாவம் அல்லவா?” என்று தொடர்ந்து கேள்வி கேட்டது எறும்பு.

“ஆம் நீங்கள் சொல்வது சரிதான் நண்பர்களே, உருவத்தில் சிறியவர்களாக இருந்தாலும் நீங்கள் ஒற்றுமையாக இருக்கிaர்கள். இப்போது எங்கள் அறிவுக் கண்களையும் திறந்துவிட்டீர்கள். நாங்களும் இனி ஒற்றுமையாக இருப்போம்” என்று ஒன்றாக கூறின ஆடுகள்.

எறும்புகள் சோற்றுப் பருக்கைகளுடன் புறப்பட்டன. வெள்ளாடுகள் செம்மறி ஆட்டிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டன.

எழுதியவர் : (8-Sep-15, 11:54 am)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 3023

மேலே