அன்பு செலுத்துங்கள், காலம் குறைவாக இருக்கிறது

"அன்பு செலுத்துங்கள், காலம் குறைவாக இருக்கிறது' என்று தேவாலயச் சுவரில் இருந்த வாசகம் அவளைச் சிந்திக்க வைத்தது. அவளைத் திருமணம் முடிக்க உயர்குலத்தைச் சேர்ந்த ஒரு மணமகன் வந்தார்.

ஆனால், ""என் மனதில் ஒரு கேள்வி பிறந்திருக்கிறது. அதற்கு விடை கிடைத்த பின்னரே திருமணம்!'' என்று மறுத்துவிட்டாள்.

ஒரு மருத்துவமனைக்குச் சென்ற அவள், அங்கு நோயாளிகளின் பரிதாப நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தாள். "அன்பு செலுத்து' என்ற வாசகத்தின் அர்த்தம் உணர்ந்தாள். உடனே மறு யோசனையின்றி நோயாளிகளைத் தொட்டுத் தூக்கி, அவர்களின் காயங்களைத் துடைத்துச் சுத்தம் செய்தாள்.

இதைக் கேள்விப்பட்ட அவளது பெற்றோர் கடும்கோபம் கொண்டனர்.

""உனக்கும் அந்த நோய் தொற்றிவிடும். ஏன் இப்படி, நமது குடும்ப மானம் போகும்படி நடந்து கொள்கிறாய்? உனக்குத் திருமணம் ஏற்பாடாகி வருகிறது... திருமணம் செய்து கொள்'' என்று வற்புறுத்தினர்.

ஆனால், ""ஆதரவற்று நிற்கும் நோயாளிகளுக்கு அன்பு செலுத்தி அவர்கள் மனத்தில் இடம்பிடிக்கப் போகிறேன். என்னை விட்டுவிடுங்கள். அன்பு செலுத்தக் காலம் குறைவாகவே உள்ளது...'' என்று சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு ஓடினாள்.

அவர்தான் "விளக்கேந்திய சீமாட்டி' என்று அழைக்கப்பட்ட ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்!

எழுதியவர் : செல்வமணி (8-Sep-15, 1:01 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 126

மேலே