கவிதை வாழும்
பொழுதின் சாயலில்
பூவின் ஆடலில்
தென்றலின் பாடலில்
ஓடையின் சலனத்தில்
நிலவின் அமுதினில்
நெஞ்சின் காதலில்
கவிதைகள் வாழும் !
பூவிழி மலர்களில்
புன்னகை இதழ்களில்
கன்னக் குழுவினில்
கலைந்தாடும் குழலினில்
குழலினில் சூடிய மலரினில்
அழகு நடம் ஆடும்
அந்த அழகினில்
கவிதை வரிகள் இடம் தேடும் !
~~~கல்பனா பாரதி~~~