டார்வின் விட்டுச்சென்றதை நான் தொட்டுச்செல்கிறேன்

கவர்ந்த கன்னங்களின் கவியை
காகிதத்தில் ஏவி ரசிக்கின்றேன்
வலைந்த வில்லும் பெருமை படும்
அவள் கண்ணிமையை உவமானமிட .
அழகிய இதழ் பிரித்து பேசும் தேவமங்கையவள்
சிற்பியின் கை சுளுக்கும் சிற்பக் களஞ்சியமவள்
தேவதைகள் கூடிப்பேசி பொறாமைப்படும் கூந்தலழகியவள்
டார்வின் விட்டுச்சென்றதை நான் தொட்டுச்செல்கிறேன்
அவள் என்னுள் காதலாக பரிணாமிப்பதை .

எழுதியவர் : பர்ஷான் (8-Sep-15, 5:35 pm)
பார்வை : 66

மேலே