அந்த காதல் அவதாரங்கள்… ஸ்வாரஸ்யமானவை

மிதிவண்டியை
கள்ளத்தனமாய்
பின்புறம்
சத்தமில்லாமல்
தள்ளிக்கொண்டு
போகையில்
அப்பாவின்
அர்ச்சனைதான்
தெருவையே
எழுப்புகிற தேவாரம்
தினந்தோறும்......
”வேலைவெட்டிக்குப்
போகாமல்
விடிகாலையிலேயே
ஊர்சுத்த கிளம்பிட்டானா...
தண்டச்சோறு....?”


நேற்றிரவு
தொலைபேசிக்காரன்
தோண்டிவைத்த
”திடீர்”குழியை
சாதுர்யமாக
தாண்டிப்போகையில்
சத்தமிட்டுப்போனான
எதிரே வந்த
லாரிக்காரன்
“சாவுகிராக்கி
என் வண்டிதான் கிடைச்சுதா..?”


உற்றுப்பார்த்து
ஸ்னேகமில்லாமல்
உறுமுகிறது
ஒரு கறுப்பு நாய்
”எல்லைதாண்டி வந்த எதிரியோ?”


உன் தெருவின்
முனையிலிருந்த
தேநீர் கடையில்
இந்த வாரம்
பாக்கிதொகையை
நிச்சயமாகவே
தீர்த்துவிடுவதாய்
உறுதிசொன்னேன்..
டக்கென்று
மேசைமீது
வைக்கப்பட்ட
தேநீர் கோப்பையில்
தெறித்தது...
”கடன்காரன்”
என்கிற
எரிச்சல்....


வேகமான வேகமாய்
உன்வீதியை
கடந்துபோகையில்
முறைத்துப்பார்த்தான்
கூர்கா
”திருட்டுபயலாய் இருக்குமோ?”


எத்தனை
எத்தனை
அவதாரங்கள்தான்
உனக்காய்
இன்னமும்
எடுப்பது நான்...?

உன்
ஒற்றைப்பார்வையில்
என்
மிதிவண்டிக்கு
இறக்கைகள்
முளைக்கும்
அந்த
”காதலன்”
என்கிற
அங்கீகாரம்
இன்றைக்காவது
கிடைக்குமா....????

எழுதியவர் : முருகானந்தன் (26-May-11, 7:46 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 343

மேலே