என்னருமைக் காதலி

என்னருமைக் காதலி
**********************************************

வஞ்சியவள் தோற்றத்தில் சாஞ்சியின் தூண் ஆவாள்
கொஞ்சும்கிளி அவள்பெயரும் ஊஞ்சலாம் அன்னநடை
காஞ்சிப்பட்டு காணா இடையேற்ற நூலாடை
மஞ்சப்பொடி தேய்த்த சொக்க வைக்கும் பேரழகி

குஞ்சமது கார்முகிலாம் நுதல் ஒட்டி நேர்வகிடாம்
தஞ்சமென தவழ்ந்து வரும் புன்னகையும் அவளிடமே
பஞ்சொத்த பாதத்தாள் காந்தள் மலர் விரல் உடையாள்
உறிஞ்சிடும் எண்ணத்தில் கீழ் அதர முத்துக்கள்

குறிஞ்சி மலர் ஒத்த வாடாத அவள் தேகம்
விரிந்த தாமரையே அவள் உற்ற பெண் உருவம்
சரியும் மேலாடை சரிசெய்யும் குணம் உடையாள்
புரிந்தும் புரியாத புதிர் ஆன தோற்ற த்தாள்

சின்ன இடை உடல் பேண விடை பகரும் கண் விழியாள்
பின்னலிட்ட கூந்தலிலே பிச்சிப்பூ சூடிடுவாள்
கன்னம் அது மாங் கதுப்பாம் ருசித்து விடும் எண்ணத்தில்
முன் அகங்கள் கவர்ச்சி உற பின்கலங்கள் தாங்கிடவே

கள்ள மனம் கொள்ளாத கட்டழகுப் பதுமையவள்
தெள்ளமுதம் போல் ஆமே செவ்வாயின் உமிழ் நீரும்
கொள்வதற்கும் கொடுப்பதற்கும் ஏராளம் அவளிடமே
அள்ளிவிட இயலாத பேரழகுப் பேரரசி

கலையாத பொட்டுண்டு ஆய கலை பல உண்டு
விலை ஆகா குன்னமுற்ற தலை சாய்க்கும் தமயந்தி
தலை சிறந்த நாற்குனங்கள் தன்னகத்தே கொண்டவளாம்
மலை போன்று எது வரினும் கலங்காத உள்ளத்தாள் !

( இவளே என் காதலி யாம் )

எழுதியவர் : சக்கரைவாசன் (9-Sep-15, 1:42 am)
பார்வை : 124

மேலே