சுவாச வேர்கள்

அர்த்தசாம‌
அடைமழையில்
திடுக்கிட்டெழுந்து
கட்டியணைக்க‌!!
ச‌ன்னல்
கண்ணாடி
வேர்க்கச்செய்தாய் !!

சமயலறை
புகுந்து
சாதுவாய்
காதோரம்
கடித்து பின்!
மோகம் தீர்த்தாய்
நான் சுவைத்த‌
கரட்டில்!!

குயிலின்
இசைகொய்து
கொலுசுக்குள்
புகுத்தி காலில்
அணிவித்து!!
இதயம் ரசித்த‌
இம்சை கொடுத்தாய்!!

உருளையா?
சதுரமா?
சுற்றும் உலகின்
உருவம்
மறக்கடித்தாய்!
உனதன்பில்..

ஒரு துளி
கண்ணீர் காட்டி
எனக்குள் கிடந்த‌
உன் உயிரை
பிடுங்கி
போய்வருகிறேன்
என்கிறாய்!
புதிதல்லவே!!

ஆண்டுக்கோர்
தடவை
உயிரெங்கும்
உன் மோகம்
குழைத்த முலாம்
பூசிப்போகும்!
இராணுவ
கண்ணாளா...

எல்லைகளில்
நீயும் இப்படித்தான்
அழுதிருப்பாயோ!!

போரற்ற பூமியில்
பூக்காதோ
காதல்!
நம் பிள்ளைக்கு.....

எழுதியவர் : புலவூரான் ரிஷி (9-Sep-15, 1:19 am)
Tanglish : suvasa vergal
பார்வை : 157

மேலே