உண்மை

உண்மை
----------------------

ஊன்றி நிற்க முடியாத
மூதாட்டியை ஏந்திக்கொண்டு
வேகமாக ஓடினார் ஒர்மனிதர்!!!
மருத்துவமனைக்கல்ல???..
ஓட்டுச்சாவடிக்கு!!!...

தேர்தல் நேரத்தில் நான்கு
நாட்களுக்கு மட்டுமே எரியும்
தெருவோர மின்விளக்குகள்...

தண்ணீர் குழாய்யடியில்
மணிக்கணக்கில் அமர்ந்தும்
காற்றை தவிர வேறேதும்
நிரம்பிடாத காலிக்குடங்கள்...

ஒற்றிய வயிற்றோடு
ஒருவேளை உணவிற்காக ஏங்கும்
ஏழை விவசாயியின்
கண்ணீர் துளிகள்..

கந்தல் துணியுடன்
பட்டுத்தறி நெய்யும்
நெசவாளியின் துயர்கள்..

பத்துநாள் பட்டினியால்
பெற்ற பிள்ளைக்கு பாலூட்ட
தன் மார்பில் பால்சுரக்காததால்
தன் பாலகனை இழந்த
தாயின் அவலநிலை....

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (8-Sep-15, 8:44 pm)
Tanglish : unmai
பார்வை : 113

மேலே