நீயே பிரம்மாஸ்திரமாய்

எண்ணங்களில் குடிகொண்டவனே,..
உன் கன்னத்தில் ஓர் முத்தம் வைத்து,
உன் விரல்களோடு விரல் கோர்த்து,
வரைய வேண்டும் ஓர் காதல் கோலம்...
காலத்தோடு அழியாத வண்ணமாய்!

இமைக்கும் என் கண் இமைக்குள்
ஒளிந்திருந்து முகம் காட்டும் உன்,
மார்போடு தலை சாய்த்து நானும்,
காண வேண்டும் ஓர் காதல் தேசம்...
காவியங்களோடு கலந்திடும் வண்ணமாய்!

பார்த்ததும் என் இதயம் நிறைக்கும்,
பாராவிட்டால் என் உயிரை குடிக்கும்,
ஆண்மைக்கு இலக்கணம் கூறும்,
ரகசியமாய் நான் ரசிக்கும் நீ...
என் நெஞ்சோடு காதல் சின்னமாய்!

கலைந்திடும் மேகமெல்லாம்
மீண்டும், மீண்டும் இணைந்து வந்து
முழு உருவம் பெறுவது போல்
விலகிட நினைக்கும் பொழுதெல்லாம்
விஸ்வரூபம் பெரும் நீயே,
என் வாழ்வின் பிரம்மாஸ்திரமாய்!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (8-Sep-15, 8:13 pm)
பார்வை : 223

மேலே