உன்னால்தானடி உயிர்

திமிர் பிடித்தவள் போலத்தான்
திரும்பி பார்க்காமல் போகிறேன்
தென்றலை போலவே நீயும்
திறந்து மனதில் நுழைகிறாய்

டொக் டொக்கென்ற உன் காலடியில்
டக் டக் கென்ற என் இதயத்தில்
விழிமீது வழியமைத்து வருகிறாய்
வேறவளை நான் தொடர முடியுமோ ?

மலைமீது சாரல் மழை போலத்தான்
சிலையாகி நனையுது உன் நினைவுகள்
அலையாகி வருகின்ற உன் துணையால்
இலையாகி இரு கண்கள் பனிக்கிறதே!

ஈருடல் ஓருயிர் நாமென்றால்
வேறெதற்கு காதல் ஒன்று போதுமே
சொர்க்கமென்று சுத்தும் பூமி வாழலாம்
சொல்லிகொள்வோம் நம் வழியில் உலகம்தான்


எழுதியவர் : . ' .கவி (27-May-11, 9:57 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 431

மேலே