மரணம்கூட மகிழ்ச்சிதான்
நிராயுதபாணியாய்
நின்றுகொண்டிருக்கிறேன்
நீயோ
இருவிழி வாளைக்கொண்டு
யுத்தம் செய்கிறாய்
தொடர்ந்து நடந்த போரில்
தோற்றுப்போனதென்னவோ
நான்தான்
தண்டனைக்கு
தயாராகிவிட்டேன்
அவசரப்பட்டு
ஆறுமாதம் சிறை என்று
அறிவித்து விடாதே
நான்
ஆயுள் கைதியாகவே
ஆசைப்படுகிறேன்
அதனால்
உன் இதயத்துள்
என்னை சிறைவைத்துவிடு
ஆயுள் தண்டனையோடு
அடைபட்டுவிடுகிறேன்
மறுப்பாயானால்.....
மரண தண்டனை
மட்டுமே போதும்!