அளவுக்கு மிஞ்சினால்
சென்னைப் பட்டணம்
செல்லவேண்டும் என்றேன்
விரைந்து!
சொன்னேன் ஓட்டுனரிடம்!
அவனோ
அழைத்துச் சென்றான்
எமன் பட்டணம்
விரைந்து!
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் விடம்!
வேகமும் கூட!
அம்மாவை காண்பது
எப்போது!
என் அம்மாவை காண்பது
எப்போது!
பெருவழிச் சாலைகளில் அதிக பட்ச வேகம் 80 கி.மீ தான்;
(ஆனால், தனியார் கார்களும், ஆம்னி பஸ்களும்
செல்லும் வேகம் 100 - 140 கி.மீ வேகம்)