சோமுவின் சித்தார்த்தன் துறவு

சூரியன் உச்சியிற் காயுவேளை -ஓர்நாள்
சுத்தோத னன்மனை முற்றத்திலே
யாரோ ஒரு பிட்சு வந்துநின்றே-"அம்மா
யாசகம்"என்றுகை நீட்டினனே ,

முற்றத்து வாயிலில் யசோதரை -வந்து
மூடுங் கதவம் திறந்திடவும்
முற்றிய ஞானமா மூர்த்தியினைக் -கண்டு
மோனத் திகைப்போடு நின்றுவிட்டாள் ,

நெஞ்சிற் பெருகிடும் ஆசையினாள்-பண்டை
நினைவு திறந்திடும் உள்ளத்தினாள்
பஞ்சை மனத்தினில் மிஞ்சிஎழும் -பெரும்
பாசத் தினாலவள் விமமிவிட்டாள்,

"பாசம் களைந்திடு பற்றை யறுத்திடு
பந்தங்கள் இல்லையென் ரோர்ந்திடம்மா
ஆசை இறந்திடில் அல்லலில்லை -பெண்ணே
ஆண்டு பலகண்ட உண்மையிது ."

எழுதியவர் : (11-Sep-15, 10:42 am)
பார்வை : 81

மேலே