திருமண அழைப்பு

பெண்ணுயிர் ஊற்றி
ஆண் வாழ்க்கைக் கோப்பையை
நிரப்பத் துணிந்த எழில்கள மேட்டில்
இரட்டைக் கிளவியாய் இணைந்து
ஈரேழு ஜென்மங்களும் பிரியாபொருளாய்
படை சாற்றிட பல்லுயிர்களும்
சொற்புடை சூழ புதிதொரு
பந்தத்தில் கால்தடம் பதிக்க
சாற்றும் சொந்தத்தில்
சந்த நயங்களும் சாளர மேளங்களும்
பதின்மமாய்ப் பாவிசைக்க
பூங்கழுத்தில் பதுமாங்கல்யம்
மங்களம் சூட சுடேரற்றி
நற்றிணையாய் நலம்சேர்க்க
சுற்றமும் வந்து சுகவாழ்த்து கூறுங்கள் - மணமக்கள்

எழுதியவர் : குயில் (11-Sep-15, 10:50 am)
சேர்த்தது : குயில்
பார்வை : 484

மேலே