இலையுதிர் காலம்

நீ
வந்து போகும்
போதெல்லாம்
முதுமையை
நினைவூட்டுகிறாய்......!

ஒவ்வொரு
இலையுதிர்வும்
ஒரு மரணத்தை
நினைவூட்டுகிறது....!!

அடுத்த தலைமுறை
தன் மரணத்தை பதிவு செய்ய,
வந்து போகும்
வேகமான காற்று
இலைகளையும்
இடபெயர்ச்சி செய்கிறது ....!!!

எந்த
சலனமுமின்றி,
மரமாய் - நான்
இன்னும் சிலமாதங்களில்
வரப்போகும்
வசந்த காலத்தை நோக்கி....!!!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (11-Sep-15, 7:01 pm)
Tanglish : ilaiyudhir kaalam
பார்வை : 842

மேலே